fbpx

“தமிழ்நாடுனா பயமா”.? நிர்மலா சீதாராமனை வேறு மாநிலத்தில் களமிறக்கும் பாஜக.! பாராளுமன்ற எலக்சன் ஸ்கெட்ச்.!

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் பற்றிய அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற தேர்தல்கள் ஏப்ரல் 2 ஆம் வாரம் தொடங்கி மே மாதம் 2வது வாரம் வரை நடைபெறும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தேர்தல் ஆணையம் இதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் மற்றும் போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆளும் கட்சியான பாரதிய ஜனதாவும் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.

கடந்த தேர்தலை விட இந்த வருட தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிடுவதற்கு பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்து இருக்கிறது. குறிப்பாக வட மாநிலங்களில் அதிக வேட்பாளர்களை களம் இறக்கும் திட்டத்தில் பாஜக இருக்கிறது. மேலும் தற்போதைய மத்திய அமைச்சரவையில் வந்திரிகளாக இருக்கும் ராஜ்ய சபா எம்பிகளான நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோரையும் வர இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் களம் இறக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மேலும் இவர்கள் இருவரும் தமிழ்நாட்டோடு தொடர்புடையவர்கள் என்றாலும் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் நிலைமை பரிதாபமாக இருப்பதால் தென் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் வாக்கு வங்கியாக திகழும் கர்நாடக மாநிலத்தில் போட்டியிட வைப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தட்சிண கன்னடா தொகுதியில் நிர்மலா சீதாராமனை களம் இறக்க பாஜக திட்டமிட்டு இருக்கிறது. கர்நாடக மாநிலத்தின் பாரதிய ஜனதா தலைவராக இருந்த நளின்குமார் இந்த தொகுதியில் தான் கடந்த மூன்று பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்றிருக்கிறார். மேலும் பாரதிய ஜனதா கட்சிக்கு இந்த தொகுதியில் அதிகமான ஓட்டு வங்கி இருப்பதால் நிர்மலா சீதாராமன் நிச்சயமாக இந்த தொகுதியில் வெற்றி பெறுவார் என கணக்கிட்டுள்ளனர்.

இதேபோன்று 2004 ஆம் ஆண்டு முதல் பாரதிய ஜனதா கட்சியின் நம்பிக்கை குரிய தொகுதியாக விளங்கும் உத்தர கன்னடா தொகுதியில் மதிய அமைச்சர் ஜெய்சங்கரை போட்டியிட வைக்கலாம் என பாரதிய ஜனதா கட்சி திட்டம் தீட்டி வருகிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஆனந்த் குமார் ஹெக்டே இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வென்று இருக்கிறார். மேலும் கடந்த தேர்தல்களிலும் பாரதிய ஜனதா கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இதனால் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை இந்த தொகுதியில் இறக்கி வெற்றிவாகை சுடலாம் என திட்டமிட்டு இருக்கிறது பாஜக .

Next Post

BREAKING NEWS: "ரேஷன் அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி.."! துவரம் பருப்பு, பாமாயில் விநியோகம் நிறுத்தப்படுகிறதா.?

Fri Jan 12 , 2024
மாநிலம் முழுவதிலும் செயல்பட்டு வரும் அரசு நியாய விலை கடைகளில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு விநியோகத்தை நிறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் ரேஷன் கடைகளின் மூலம் அத்தியாவசியமான பொருள்கள் இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கடைகளின் மூலமாக பொதுமக்களுக்கு அரசு பல உதவிகளையும் வழங்கி வருகிறது. நிவாரண நிதி மற்றும் பொங்கல் […]

You May Like