fbpx

அடுத்த அதிரடி…! முதல்வர் ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்ட பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை…!

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரம் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில்; மது இல்லாத தமிழகம் என்பது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கனவு மட்டுமல்ல. தமிழக பொது மக்களின் விருப்பமும் கூட. அதனை நிறைவேற்றிட, தமிழக பாரதிய ஜனதா கட்சியானது தகுந்த ஆலோசனைகளையும், கருத்துகளையும் வகுத்துள்ளது. இதுகுறித்த வெள்ளை அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதாக ஏற்கெனவே அறிவித்திருந்தேன்.

இதுதொடர்பாக, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் தலைமையிலான ஐவர் குழுவானது தங்களை சந்தித்து, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் திட்டத்தினை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன். ஆகவே, தாங்கள், வருகின்ற ஜூலை 11ம் தேதி முதல் 13-ம் தேதி அல்லது இம்மாதத்தில் ஏதாவது ஒரு தினத்தில், தங்களது பொன்னான நேரத்தை இந்த சந்திப்புக்கு ஒதுக்கி தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

இன்று உலக மக்கள் தொகை தினம்!... 800 கோடியாக உயர்ந்த மக்கள் தொகை!... சீனாவை முந்திய இந்தியா!... ஓர் அலசல்!

Tue Jul 11 , 2023
1987 ஜூலை 11-ம் தேதி உலக மக்கள்தொகை 500 கோடியை எட்டியது. அந்நாளே உலக மக்கள்தொகை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 11) 37-வது உலக மக்கள்தொகை தினமாகும். நாட்டின் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு 1872-ம் ஆண்டு நடைபெற்றது. அதன் பிறகு, 1881-ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இன்று உலக மக்கள் தொகை 800 கோடி என்ற அளவைத் […]

You May Like