fbpx

எனது உழைப்பு தொடரும்… கோவை திமுக வெற்றி வேட்பாளருக்கு அண்ணாமலை வாழ்த்து…!

கோவையில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கோவை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ஜி.ராமச்சந்திரன், பாஜக சார்பில் அண்ணாமலை, நாம் தமிழர் சார்பில் கலாமணி ஜெகநாதன் மற்றும் சுயேச்சைகள் உட்பட 37 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கணபதி ராஜ்குமார் 1 லட்சத்து 18 ஆயிரத்து 068 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் அண்ணாமலை 4,50,132 வாக்குகள், அதிமுக வேட்பாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் 2,36,490 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் 82,543 வாக்குகளும் பெற்றனர். இந்த நிலையில் தனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில்; கோவை பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்ட எனக்கு, 4.50 லட்ச வாக்குகள் அளித்து, அன்பையும் ஆதரவையும் அள்ளித் தந்திருக்கும் கோவை பாராளுமன்றத் தொகுதி பொதுமக்கள் அனைவருக்கும் தலைவணங்கி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.கோவையின் புதிய பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோதரர் ராஜ்குமார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட மாற்று கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கோவை தொகுதி வளர்ச்சிக்கு, அவர் மேற்கொள்ளும் அனைத்து நலத்திட்டங்களுக்கும் முழுமையான ஆதரவை அளிப்பதோடு, தொடர்ந்து கோவை தொகுதி பொதுமக்கள் முன்னேற்றத்துக்கான என் உழைப்பை இரட்டிப்பாக்குவேன் என்று உறுதி அளிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் ஏசி காற்று!! நீண்ட நேரம் பயன்படுத்தினால் ஆபத்து!!

Wed Jun 5 , 2024
நாள் முழுவதும் ஏசி காற்றிலேயே இருப்பது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு நோய்களையும் உண்டாக்குகிறது. கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க, மக்கள் ஏசியை நாடுகின்றனர். ஆனால் தொடர்ந்து ஏசி உபயோகிப்பது உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இல்லையெனில், ஏசியைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளுவது அவசியம். கடந்த சில நாட்களாக, தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்பத்தால், குளிரூட்டி(Air Conditioner) […]

You May Like