fbpx

திடீர் ட்விஸ்ட்.. தேமுதிக, அதிமுகவை தொடர்ந்து ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணித்தது பாஜக..!!

தேமுதிக, அதிமுகவை தொடர்ந்து ஈரோடு இடைத்தேர்தலை பாஜக புறக்கணிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா கடந்த 2021ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவர் திடீரென உயிரிழந்ததை அடுத்து 2023ஆம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், அவருடைய தந்தையும், காங்கிரஸ் மூத்த நிர்வகியுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில், அவரும் உடல்நலக்குறைவால், கடந்த ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி காலமானார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் போட்டியிட்டு வந்த இந்த தொகுதியின் இடைத்தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக வி.சி. சந்திரகுமார் களமிறக்கப்பட்டுள்ளார். மேலும், இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுகவும், தேமுதிகவும் அறிவித்துள்ளன.

 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை குறித்து நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்காமல் இருந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு இடைத்தேர்தல் தான் எங்கள் இலக்கு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Read more ; ”இந்த ஆட்டத்துக்கு நாங்க வரல”..!! விலகியது காங்கிரஸ்..!! ஈரோடு தொகுதியில் போட்டியிடும் திமுக..!! வேட்பாளர் இன்று அறிவிப்பு..?

English Summary

BJP state president Annamalai has said that BJP will boycott the Erode by-elections following DMDK and AIADMK.

Next Post

நீதிமன்ற உத்தரவை மீறினாலும்  மனைவிக்கு ஜீவனாம்சம் உண்டு..!! - உச்ச நீதிமன்றம் அதிரடி

Sun Jan 12 , 2025
Even if she defies court orders and does not live with her husband - a wife is entitled to maintenance

You May Like