fbpx

ஒரே நாடு ஒரே தேர்தல்… முதல்வருக்கு அண்ணாமலை ஆதாரத்துடன் கொடுத்த பதிலடி…!

ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற நடைமுறையை ஆதரித்தவர் கருணாநிதி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல்” குறித்து ஆராய, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த 2023ஆம் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவானது ஒரே நாடு, ஒரே தேர்தலில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து பல மாதங்களாக ஆராய்ந்து கடந்த மார்ச் மாதம், இதுதொடர்பான அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இத்திட்டத்திற்கு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலேயே இந்த மசோதாவைத் தாக்கல் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது,”ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா என்ற மோசமான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதைச் செயல்படுத்த முடியாது. இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையானது பிராந்தியக் குரல்களை அழித்து, கூட்டாட்சித் தத்துவதைச் சிதைத்து, ஆட்சியைச் சீர்குலைக்கும். இந்திய ஜனநாயகத்தின் மீதான இந்த தாக்குதலை முழு பலத்துடன் எதிர்ப்போம் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ‘ஒரேநாடு ஒரே தேர்தல்’மசோதா தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற நடைமுறையை ஆதரித்தவர் கருணாநிதி. முதலமைச்சர் தனது தந்தையின் சுயசரிதை நூலை படிக்கவில்லை என்று தெரிகிறது. ஒழுங்கற்ற தேர்தல் சுழற்சி அரசு திட்டங்களை செயல்படுத்த இடையூறு என கருணாநிதி கூறியிருந்தார்” என்று தெரிவித்துள்ளார்.

English Summary

BJP state president Annamalai has said that Karunanidhi supported the ‘one nation, one election’ system.

Vignesh

Next Post

அதிர்ச்சி!. இளைஞர்களிடையே அதிகரிக்கும் புற்றுநோய்!. 1000 மடங்கு அதிகரித்த பாதிப்பு!. ஆய்வில் அதிர்ச்சி!

Fri Dec 13 , 2024
Cancer: சில வகையான சமையல் எண்ணெய்கள் இளைஞர்களுக்கு பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கின்றன என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. சூரியகாந்தி, கனோலா, சோளம் மற்றும் திராட்சை விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் பல எண்ணெய்களை அதிக அளவில் உட்கொள்வது உடலில் அழற்சியின் அபாயத்தை அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது. பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 80 நோயாளிகளிடம் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில் இந்த நோயாளிகளின் கட்டிகளில் அதிக அளவு பயோஆக்டிவ் லிப்பிடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. […]

You May Like