fbpx

’ரத்தம் வடிய வடிய சித்ரவதை’..!! நடிகைக்காக ரசிகரை கொன்ற நடிகர்..!! பிரேத பரிசோதனை அறிக்கையில் ஷாக்..!!

நடிகை பவித்ரா கவுடாவை திட்டி ஆபாசமாக மெசேஜ் செய்த ரசிகரை கொலை செய்ததாக கன்னட நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார். இறந்த ரசிகரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தர்ஷன். இவரும் நடிகை பவித்ரா கவுடாவும் நண்பர்கள். இந்நிலையில் தான், பவித்ரா கவுடாவுக்கு இன்ஸ்டாகிராமில் சித்ரதுர்காவை சேர்ந்த 33 வயது நிரம்பிய ரேணுகாசாமி என்பவர் ஆபாசமாகவும், திட்டியும் மெசேஜ் அனுப்பியுள்ளார். இதுபற்றி பவித்ரா, நடிகர் தர்ஷனிடம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, திடீரென்று ரேணுகாசாமி வீட்டில் இருந்து மாயமான நிலையில், அவர் பெங்களூரில் உள்ள கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டார்.

அவரது உடைலை நாய்கள் கவ்வி இழுப்பதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து, உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், ரேணுகாசாமியின் உடலில் காயங்கள் இருந்தன. இதனால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து, விசாரணையையும் தீவிரப்படுத்தினர். அப்போது தான், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

அதாவது ரேணுகாசாமியின் கொலையில் நடிகர் தர்ஷனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர் 3 பேருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கி அவரை கடத்திக் கொலை செய்தது தெரியவந்தது. அதன்படி, அந்த கும்பல் ரேணுகாசாமியை கடத்தி பெங்களூரு அழைத்து வந்து கார் ஷெட்டில் அடைத்து சித்ரவதை செய்து கொலை செய்துள்ளனர். பின்னர், உடலை கால்வாயில் வீசி சென்றுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா உள்பட 13 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மேலும், நடிகர் தர்ஷன் தனது மனைவியை பிரிந்துள்ளார். இந்த பிரிவுக்கு நடிகை பவித்ரா தான் காரணம் என ரேணுகாசாமி நினைத்ததும், இதனால் நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகரான ரேணுகாசாமி, பவித்ரா ஆபாசமாக இன்ஸ்டாகிராமில் திட்டி, மெசேஜ் அனுப்பியதும் தெரியவந்தது. இதுபற்றி பவித்ரா கூறிய நிலையில், தர்ஷன் பணம் கொடுத்து அவரை கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் தான், இறந்த ரேணுகாசாமி எப்படி கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தொடர்பான திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, பிரேத பரிசோதனை அறிக்கையில், ரேணுகாசாமியின் தலை, வயிறு, மார்பு உள்பட பிற உடல் உறுப்புகளில் காயங்கள் உள்ளன. ரத்தம் வடிய வடிய அவர் சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். அவரது தலையை வாகனத்தின் மீது இடித்துள்ளதற்கான அடையாளங்கள் உள்ளன. மொத்தம் 15 இடங்களில் காயங்கள் உள்ளன. பெல்ட் ஆகியவற்றால் தாக்கியதற்கான அடையாளம் உள்ளன.

Read More : Kuwait தீவிபத்து..!! 7 தமிழர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு வந்தடைந்தது..!! இன்று நல்லடக்கம்..!!

English Summary

Kannada actor Darshan has been arrested for murdering a fan who insulted actress Pavitra Gowda and sent obscene messages. Shocking information has been revealed in the post-mortem report of a dead fan.

Chella

Next Post

கச்சா எண்ணெய் மீதான வரி குறைப்பு!. இன்றுமுதல் அமல்!. பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமா?

Sat Jun 15 , 2024
Tax reduction on crude oil! Effective from today! Petrol-Diesel price change?

You May Like