fbpx

BOB வங்கியில் ரூ.15,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு…! விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்…!

பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Business Correspondent Supervisor பணிகளுக்கு என மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 21 முதல் 45 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Finance,MCA, MBA போன்ற பாடபிரிவில் ஏதேனும் ஒன்றில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் 3 ஆண்டுகள் தேவை.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணிக்கு ஏற்றபடி ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,000 முதல் ஊதியம் வழங்கப்பட உள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு பொதுப்பிரிவில் 600 ரூபாய் ஆகவும், SC, ST, PWD மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு 100 ரூபாய் ஆகவும் விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் நாளை மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For more Info: https://drive.google.com/file/d/1olC67dAD7O24UUxaEPUoGtJ0bBZtqEJX/view?usp=sharing

Vignesh

Next Post

வெறும் 10-15 பந்துகள் மட்டுமே விளையாடும் இவரை எப்படி அணிக்குள் எடுப்பீர்கள்? - கவுதம் கம்பீர்

Sun Sep 18 , 2022
தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் அணிக்குள் விளையாட முடியாது என்றும், வெறும் 10-15 பந்துகள் மட்டும் விளையாடும் ஒரு வீரரை எப்படி அணிக்குள் எடுப்பீர்கள் என்றும் முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் பேசியுள்ளார். பிசிசிஐ டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்ததில் இருந்தே ஷமி முதன்மை அணிக்குள் எடுக்காதது குறித்தும், ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரில் யார் ஆடும் அணியில் இடம்பிடிப்பார் […]

You May Like