சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் உள்ள சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பம்ப் ஹவுஸ் காலனியில் 20 வயது பெண் ஒருவர் பேருந்து நடத்துநரால் ஸ்க்ரூ டிரைவரால் குத்திக் கொல்லப்பட்டார்.
கொலையாளி பஸ் கண்டக்டர் பணிபுரிந்த பேருந்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இளம்பெண் பயணம் செய்ததாகவும், நடத்துனருக்கும் இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், அதன்பிறகு அந்த பெண் நடத்துனருடன் தொடர்பை துண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை ஆத்திரமடைந்து ஸ்க்ரூடிரைவரால் 51 முறை குத்தியுள்ளார் பஸ் டிரைவர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இளம்பெண் உயிரிழந்தார். பின்னர் கொலையாளி தப்பி ஓடிவிட்டார்.
பின்னர், இளம்பெண்ணின் சகோதரர் இதனை பார்த்து, குற்றத்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான கொலையாளியை தேடி வருகின்றனர்.