fbpx

Prajwal Revanna: பாலியல் வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா முன்னிலை!

கர்நாடக பாலியல் புகார் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, விசாரணைக்காக சிறைக்காவலில் உள்ள பிரஜ்வல் ரேவண்ணா முன்னிலை வகித்து வருகிறார். 

நாட்டின் 18ஆவது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், 44 நாட்களில் அடுத்தடுத்த கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மொத்தமுள்ள 543 தொகுதிகளில், குஜராத் மாநிலம் சூரத்தில் மட்டும் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

மீதமுள்ள 542 தொகுதிகளில் பாஜக கூட்டணி, I.N.D.I.A. கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் பிறக்கட்சியைச் சேர்ந்தவர்கள் களம் கண்டனர். முதல்கட்டத்தேர்தலில் 66.1 சதவிகிதம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத் தேர்தலில் முறையே 66 புள்ளி 7 மற்றும் 61 சதவிகித வாக்குகள் பதிவாகின. இதேபோல் நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் கட்டத் தேர்தலில் 67.3, 60.5, 63.4 சதவிகித வாக்குகள் பதிவாகின.

கடைசி கட்டத் தேர்தலில் 62 சதவிகித வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. தேசத்தில் மொத்தம் நாட்டில் வாக்களிக்க தகுதியுடைய சுமார் 97 கோடி பேரில், 64 கோடியே 20 லட்சம் பேர் ஜனநாயக கடமையாற்றியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

கர்நாடக பாலியல் புகார் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இவர் வெளிநாட்டுக்கு சென்றார். ரேவண்ணா, அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில்,  வரும் மே 31 ஆம் தேதி தாயகம் திரும்பி வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) முன் ஆஜராவேன் என்று அறிவித்தார்.  இந்நிலையில் நள்ளிரவில் நாடு திரும்பிய ரேவண்னாவை,  விமான நிலையத்திலேயே காத்திருந்த சிறப்பு விசாரணைக் குழுவினர் கைது செய்தனர்.

இந்நிலையில்,  கர்நாடக பாலியல் புகார் வழக்கில் சிக்கியுள்ள ஜே.டி.எஸ் கட்சியைச் சேர்ந்த பாஜக கூட்டணி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா, அவர் போட்டியிடும் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹசன் தொகுதியில்  முன்னிலை வகித்து வருகிறார்.

English Summary

english summary

Next Post

ஆந்திராவில் ஆட்சி மாற்றம்..!! அரியணை ஏறும் சந்திரபாபு நாயுடு..!!

Tue Jun 4 , 2024
In Andhra Pradesh, Telugu Desam Party is ahead in 113 seats, crossing the required 88 seats to form the government.

You May Like