fbpx

BREAKING | விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..!! அதிமுக போட்டியிடாது..!! எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு..!!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்போவதாக முடிவு செய்துள்ளது.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பாளர்களின் வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தேர்தலில் அதிமுக சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

இதுதொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனையின் முடிவில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்போவதாக முடிவு செய்துள்ளது. தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதால் தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால், அக்கட்சியின் தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Read More : வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!! பெட்ரோல், டீசல் விலை ரூ.3 உயர்வு..!! உடனே அமலுக்கு வருவதாக அறிவிப்பு..!!

English Summary

AIADMK has decided to boycott the Vikravandi by-election.

Chella

Next Post

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்த அதிமுக..! காரணம் என்ன..!

Sat Jun 15 , 2024
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பாளர்களின் வேட்புமனுத் தாக்கல் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும்கிறது. திமுக பாமக, நாதக போன்ற கட்சிகள் வேட்பாளரை அறிவித்த நிலையில், அதிமுக தரப்பில் யாரை வேட்பாளராக நிறுகொத்தப்போகிறது என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணித்திருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக கூறி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி […]

You May Like