fbpx

தங்கையுடன் தகாத உறவு; எரிந்த நிலையில் கிடந்த சடலத்தால் பரபரப்பு..

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி கிராமத்தில் விறகுகளில் இருந்து புகை வந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்த போது, அங்கு எலும்புக்கூடு கிடந்துள்ளது. மேலும் அதற்கு அருகில் கல்லில் அடித்து கொலை செய்யதது போல் ரத்தமும் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சம்பவம் குறித்து டவுன் காவல் நிலைய போலீசருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஏ.எஸ்.பி மதிவாணன் தலைமையிலான போலீசார், அங்கிருந்த தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பாளையம்பட்டி காமாட்சி தெரு பகுதியை சேர்ந்த காமாட்சி என்பவரது மகன் மங்கையன் தான் சடலமாக கிடந்தது தெரியவந்துள்ளது. கூலித் தொழில் செய்து வரும் இவர், தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், மங்கையனின் தங்கை முறைக் கொண்ட உறவுக்கார பெண் ஒருவரும், அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரும் திருமணத்தை மீறிய கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இதனால் மங்கையன், முத்துக்குமாரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முத்துக்குமார், கத்தியை வைத்து மங்கையன் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து  கீழே விழுந்த மங்கையன் தலையில் அங்கிருந்த பெரிய கல்லை எடுத்து தலையில் போட்டுள்ளார். இதில் மங்கையன் சுருண்டு விழுந்து பலியாகியுள்ளார். பின்னர் மங்கையன் உடலை இழுத்து வந்து விறகு குவியல்களில் போட்டு தீ வைத்துள்ளார். இதையடுத்து, போலீசார் முத்துக்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Read more: மனைவியுடன் ஏற்பட்ட தகராறு; தீப்பற்றி எறிந்த 4 வயது குழந்தை… நெஞ்சை பதைபதைக்கும் கொடூர சம்பவம்.

English Summary

brother was brutally killed

Next Post

"வரலாற்று சிறப்புமிக்க வெற்றி" உலக செஸ் சாம்பியனான குகேஷ்-க்கு பிரதமர் மோடி வாழ்த்து..!

Thu Dec 12 , 2024
Prime Minister Modi congratulates world chess champion Gukesh on his "historic victory".

You May Like