மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்(BSNL) நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் கர்நாடக மாநிலத்தில் உள்ள அலுவலகங்களில் Apprentice பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு என மொத்தம் 100 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் Diploma அல்லது ஏதாவது ஒரு பட்டப் படிப்பில் டிகிரி தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
விண்ணப்பதாரர்களுக்கு வயதுவரம்பு குறித்து எந்த தகவலும் இல்லை. பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 29 தேதி கடைசி நாள். எனவே, தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நபர்களுக்கு கர்நாடக மாநிலத்தில் வேலை. மேலும் இந்த பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.
For More Info: http://mhrdnats.gov.in./