fbpx

தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் கீழ் ஒப்புதல்…! மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு…!

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் கீழ் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த இயக்கத்திற்கான ஆரம்ப ஒதுக்கீடு ரூ.19,744 கோடியாக இருக்கும். இதில் சைட் நிகழ்ச்சிக்கு ரூ.17,490 கோடியும், முன்னோடி திட்டங்களுக்கு ரூ.1,466 கோடியும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு ரூ.400 கோடியும் இதர இயக்க அம்சங்களுக்கு ரூ.388 கோடியும் அடங்கும்.

மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், இத்திட்டத்திற்கான விதிமுறைகளை வகுப்பதுடன் அவற்றை செயல்படுத்தும்.2030 ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 5 மில்லியன் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் திறனை மேம்படுத்தப்படும். மொத்த முதலீடுகள் ரூ.8 லட்சம் கோடிக்கும் அதிகமாகும்.

மேலும் 6 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக புதைபடிம எரிபொருள் இறக்குமதி குறையும். ஆண்டுக்கு சுமார் 50 மில்லியன் மெட்ரிக் டன் கிரீன் ஹவுஸ் வாயு உமிழ்வு குறைக்கப்படும்.

Vignesh

Next Post

’சஹானா சாரல் தூவுதோ’..!! காதலியுடன் இன்பம் பொங்க..!! இன்பநிதியின் வைரலாகும் புகைப்படம்..!!

Thu Jan 5 , 2023
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி, தனது காதலியுடன் எடுத்ததாக கூறப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகனும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பேரனுமான இன்பநிதி, ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இன்பநிதி ஒரு கால்பந்தாட்ட வீரர் ஆவார். அவர் சமீபத்தில் கால்பந்து போட்டியில் பங்கேற்க […]
இணையத்தில் உலா வரும் இன்பநிதியின் புகைப்படம்..!! அம்மா சொன்ன அந்த வார்த்தை..!!

You May Like