நம்முடைய உடலில் நாள்தோறும் புது புது பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அவை அனைத்திற்கும் நம்முடைய உடல் நலத்தில் நாம் சரியாக கவனம் செலுத்தாதும், தற்போதைய நவீன கால உணவு முறையும் தான் காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.
அந்த வகையில், நம்முடைய உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் ஒன்றான கிட்னி பகுதியில் கல் ஏற்பட்டால், அது நம்முடைய உடலில் பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தி விடும். இதன் காரணமாக, இந்த கிட்னியில் கல் ஏற்பட்டால், அதனை எப்படி சரி செய்வது? என்பது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
நம்முடைய கிச்சனையில் கல் ஏற்பட்டு விட்டால், அதனை போக்குவதற்காக, ஒரு சில திரவங்களை நாம் குடிப்பது நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது, துளசி சாறுடன் ஒரு டீஸ்பூன் தேனை கலந்து, பருகி வந்தால், கிட்னியில் உள்ள கல் மெல்ல, மெல்ல கரையும் என்று கூறப்படுகிறது.
அத்துடன் எலுமிச்சை சாறுடன், தயிர் மற்றும் உப்பு உள்ளிட்டவற்றை சேர்த்து, சாப்பிட்டு வந்தால், கிட்னியில் உள்ள கல் கரைவதற்கான வாய்ப்பு உள்ளது. அதேபோல, தக்காளியை சாராக பிழிந்து, மிளகு மற்றும் உப்பு உள்ளிட்டவற்றை சேர்த்து, குடித்து வந்தால், கிட்னியில் உள்ள கல் மெல்ல, மெல்ல கரையும் என்று கூறப்படுகிறது.