fbpx

“பிரதமர் மோடியின் தமிழக வருகையை ரத்து பண்ணுங்க” – திமுக, காங்கிரஸ் எதிர்த்து மனு!!

பிரதமர் மோடி இன்று தமிழகம் வரவுள்ளார். இந்த நிலையில் இதனை எதிர்த்து திமுக, காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது

பிரதமர் நரேந்திர மோடி இன்று கன்னியாகுமரி வருவதை ஒட்டி காவல்துறையினர் தீவிர சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் மோடி இன்று முதல் மூன்று நாட்கள் கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில், அவரின் வருகையை ஒட்டி, ஹெலிகாப்டர் பாதுகாப்பு ஒத்திகைகளும், தரைவழியாக அவர் செல்லும் பகுதிகளில் தீவிர சோதனைகளும், கடற்பகுதியில் தீவிர ரோந்து பணிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும் அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் ஆதார் அட்டை சரிபார்ப்பு மற்றும் விலாசம் பெறப்பட்டு, அவர்கள் முழு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். அதே போன்று அனைத்து தனியார் தங்கும் விடுதிகளிலும், தங்கி இருப்பவர்களின் விவரங்கள் குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரதமரின் பயண திட்டத்தில், அவர் பகவதி அம்மன் கோயிலுக்கு செல்ல உள்ளதாகவும், ஜூன் 1-ஆம் தேதி திருவள்ளூவர் சிலை அமைந்துள்ள பகுதிக்கு சென்று பார்வையிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மோடியின் தியானத்தை ரத்து செய்யக்கோரி மாவட்ட தேர்தல் அலுவலரிடம் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் மனு அளித்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது பிரதமரின் தியான நிகழ்வுக்கு அனுமதி தரக்கூடாது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தேர்தல் பரப்புரைம் யுக்தியாகவே அது பிரதிபலிக்கும். எனவே அவரது வருகையை ரத்து செய்ய வேண்டும், இல்லையெனில் கட்சி மேலிடத்தில் கேட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என திமுக தரப்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சியும் புகார் அளித்துள்ளது. இறுதிக் கட்ட தேர்தல் நடைபெற உள்ள நேரத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பரப்புரை செய்ய அனுமதிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1 ஆம் தேதிக்கு பிறகு பிரதமர் மோடியை தியானம் செய்ய அனுமதிக்கலாம் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More: ‘மாட்டின் சிறுநீரில் குளித்து, சாணத்தை சன் ஸ்க்ரீமாக பயன்படுத்தும் மக்கள்!!’ எங்க இருக்காங்க தெரியுமா?

Baskar

Next Post

சிறார்கள் இனி வாகனம் ஓட்டினால் ரூ.25,000 அபராதம் - ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதி

Thu May 30 , 2024
18க்கு கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டி பிடிப்பட்டால், அவர்கள் ஓட்டிய வாகனத்தின் ஆர்சி புக்கையை ரத்து செய்யும் புதிய விதிமுறை ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்தியாவில் இருசக்கர வாகனம் ஓட்ட வேண்டும் என்றால் 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். ஆனால் 18 வயது நிறைவு பெறாத சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதும் அதிகரித்து வருகிறது. அவ்வபோது சிறார்கள் இயக்கும் வாகனங்கள் விபத்துக்குள்ளாவதும் வாடிக்கையாகி வருகிறது. மேலும் […]

You May Like