fbpx

“மாப்பிள்ளை அவர்தான்; ஆனா சட்டை மட்டும் தமிழ்நாடு அரசு..” முதல்வர் ஸ்டாலினை சீண்டிய அண்ணாமலை.!

தமிழக பாஜக தலைவராக பதவி வகித்து வரும் அண்ணாமலை தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் பத்திரிக்கையாளர்களுடன் ஏற்பட்ட மோதலில் பத்திரிக்கையாளர் சங்கத்தினை திமுகவுடன் தொடர்புபடுத்தி பேசினார். மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி என திமுக அரசின் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார்.

சில தினங்களுக்கு முன்னர் டிஎம்கே பைல்ஸ் என்ற பெயரில் ‘X’ சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று பதிவு செய்திருந்தார். அந்த வீடியோவில் 2ஜி அலைக்கற்றை ஊழல் சம்பந்தமாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ .ராசா மற்றும் முன்னாள் தமிழக புலனாய்வுத்துறை அதிகாரி ஜாபர் சேட் ஆகியோருக்கு இடையே நடந்த உரையாடலை பதிவு செய்திருந்தார். இது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது .

இந்நிலையில் திமுக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து அண்ணாமலை வைத்திருக்கும் விமர்சனம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தனது கருத்தை தெரிவித்த அவர் தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் எல்லாம் மத்திய அரசின் திட்டம் என குறிப்பிட்டு இருக்கிறார். அந்தத் திட்டங்களில் ஸ்டிக்கர் ஒட்டி தமிழக அரசு செயல்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டி இருக்கிறார். இது தொடர்பாக படையப்பா படத்தில் வரும் நகைச்சுவை வசனத்தையும் மேற்கோள் காட்டி இருக்கிறார் . அதன்படி மாப்பிள்ளை மத்திய அரசுதான் ஆனால் போட்டிருக்கும் சட்டை தமிழக அரசுடையது என நகைச்சுவையுடன் தெரிவித்து இருக்கிறார். இந்தக் கருத்தின் மூலம் முதல்வரையும் தமிழக அரசையும் சீண்டி இருக்கிறார் அண்ணாமலை.

Next Post

சத்தீஸ்கரில் பதற்றம்.!! "பாதுகாப்பு படையினர் மீது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தாக்குதல்.." 5 போலீசார் படுகாயம்.!

Tue Jan 30 , 2024
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 5 பாதுகாப்பு படையினர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தத் தாக்குதல்கள் அதிகரித்து வரும் மோதலை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் டெகுலகுடம் கிராமத்தில் ஜகர்குண்டா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சுக்மா கிராமத்தில் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் வழங்குவதற்காக பாதுகாப்பு முகாம் அமைக்கப்பட்டிருந்தது. […]

You May Like