fbpx

மத்திய அரசு அதிரடி: “ஊடுருவலை தடுக்க இந்திய – மியன்மார் எல்லையில் பாதுகாப்பு வேலிகள்..” உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்.!

மியான்மார் நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரின் காரணமாக மியான்மாரில் இருந்து தப்பி வரும் ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்படும் என இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார்.

புதிதாக அமைக்கப்பட்ட அசாம் கமாண்டோ பட்டாலியன் படை பிரிவினரின் அணிவகுப்பு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா மியான்மார் நாட்டில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவும் நபர்களை தடுப்பதற்காக இந்தியா மற்றும் மியான்மார் எல்லையில் தடுப்பு வேலைகள் அமைக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.

கடந்த சில மாதங்களாகவே மியான்மார் நாட்டினர் இந்திய எல்லைக்குள் ஊடுருவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார். இந்திய மற்றும் பங்களாதேஷ் எல்லையில் பாதுகாப்பு வேலிகள் அமைத்ததை போன்று இந்தியா மற்றும் மியான்மார் எல்லையிலும் பாதுகாப்பு விழிகள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் 550 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீ ராமர் தனது இல்லமான ராமந்திர் கோவிலுக்கு திரும்பி இருப்பது தேசத்திற்கே பெருமையான விஷயம் எனவும் தெரிவித்துள்ளார் . பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியாவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதையும் பெருமையுடன் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார் அமித்ஷா.

Next Post

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராமர் கோவில், சிறப்பு விளக்குகள், 'கர்ப்ப கிரகத்தில்' பயன்படுத்தப்படும் பாரம்பரிய தீபம் | முழு விவரங்கள்.!

Sat Jan 20 , 2024
ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்விற்காக அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. நகரம் முழுவதும் விளக்குகளாலும் வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வான ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக தயாராகி வருகிறது. கும்பாபிஷேகத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே பாக்கி இருக்கும் நிலையில் ராமர் கோவில் வண்ண விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. ராமர் கோவில் அலங்காரங்களுக்காக இயற்கையான மலர்களே பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். குளிர்காலம் என்பதால் மலர்கள் நீண்ட நேரம் வாடாமல் வாசனை […]

You May Like