fbpx

வாவ்…! தென்மேற்குப் பருவமழை.. நாடு முழுவதும் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்பு…!

2024 ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்குப் பருவமழையின் போது நாடு முழுவதும் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலாளர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; 2024 தென்மேற்குப் பருவமழை குறித்து விளக்கமளித்தார். நீண்ட கால சராசரியில் 106% ஆக இருக்கும் என்றும், இது 5% கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். 1971-2020 தரவுகளின் அடிப்படையில் நாடு முழுவதும் பருவகால மழையின் நீண்டகால சராசரி 87 செ.மீ. இந்த முன்னறிவிப்பு இயக்கவியல் மற்றும் புள்ளிவிவர மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டது.,

வடமேற்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிக மழை பெய்யக்கூடும் என்றார். வடக்கு அரைக்கோளத்தில் இயல்பை விட குறைவான பனி உறைவு, 2024 தென்மேற்குப் பருவமழை காலத்தில் மழைக்கு சாதகமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். கடந்த மூன்று மாதங்களில் (ஜனவரி முதல் மார்ச் 2024 வரை) வடக்கு அரைக்கோளத்தில் பனிப்பொழிவு இயல்பை விட குறைவாக இருந்தது, இது இந்தப் பருவமழை காலத்தில் அதிக மழைப்பொழிவைக் குறிக்கிறது.

மேலும் வடக்கு அரைக்கோளம் மற்றும் யூரேசியா முழுவதும் குளிர்கால மற்றும் வசந்த கால பனி பரப்பளவு பொதுவாக அடுத்தடுத்த பருவ மழையுடன் தலைகீழ் தொடர்பைக் கொண்டுள்ளது. 2024 மே கடைசி வாரத்தில் பருவ மழைக்கான புதுப்பிக்கப்பட்ட கணிப்புகளை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடும் என்று அவர் கூறினார்.

Vignesh

Next Post

சுங்கச் சாவடிகளில் VIP-களும் கட்டணம் செலுத்த வேண்டும்...! விரைவில் வெளியாகும் அறிவிப்பு..!

Tue Apr 16 , 2024
சுங்கச் சாவடிகளில் விஐபி கலாச்சாரத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க தேசிய நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது. சுங்கச் சாவடிகளில் விஐபி கலாச்சாரத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க தேசிய நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது. சுங்கச் சாவடிகளில் இனி வரும் காலங்களில் அனைவரும் கட்டணம் செலுத்தியே தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வகையில் விதிமுறைகளில் திருத்தங்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. தற்பொழுது இருக்கும் நடைமுறையின் படி சுங்கச்சாவடிகளில் பொதுவாக உயரதிகாரிகளின் வாகனங்களுக்கு பயனர் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு […]

You May Like