fbpx

Alert..! டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு…! 55 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று…!

’நெருங்கும் புயல்’..!! என்ன செய்ய வேண்டும்..? என்ன செய்யக்கூடாது..? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்ளிலும், கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், 19-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

English Summary

Chance of rain in Delta districts today and tomorrow…! Cyclonic winds at a speed of 55 kmph.

Vignesh

Next Post

பாலியல் உறவுக்கு பாதாம் சாப்பிடலாமா..? ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிட வேண்டும்..? கண்டிப்பா இதை படிங்க..!!

Fri Jan 17 , 2025
Let's learn about the greatness of almonds, which provide our body with various nutrients.

You May Like