fbpx

#Rain: தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு…! வானிலை மையம் கணிப்பு…!

தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை மற்றும் நாளை மறுநாள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும். வரும் 4-ம் தேதி, தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

பால் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை உயர்வு...! இன்று முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பு...!

Wed Mar 1 , 2023
இன்று முதல் எருமைப்பால் லிட்டருக்கு 5 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மும்பை பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ; நகரில் இன்று முதல் எருமைப்பால் லிட்டருக்கு 5 ரூபாய் வரை விலை உயர்வை அறிவித்துள்ளது. இந்த விலை ஏற்றம் குறித்து பேசிய சங்கத்தின் தலைவர்; எருமைப்பாலின் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. நகரத்தில் உள்ள 3,000 சில்லறை விற்பனையாளர்கள், லிட்டருக்கு ரூ.80லிருந்து ரூ.85 ஆக உயர்த்தப்பட்டு, ஆகஸ்ட் 31 வரை அமலில் […]

You May Like