fbpx

இன்று எந்தெந்த மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை…? வானிலை மையம் முக்கிய அறிவிப்பு…!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக இன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, சுன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 17-ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

அசத்தல்...! அரசு சார்பில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 உதவித்தொகை வழங்கும் திட்டம்...! முழு விவரம்

Tue Dec 12 , 2023
மகாராஷ்டிரா அரசு மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு புதிய நிதித் திட்டத்தை அறிவித்துள்ளது. நமோ கிசான் மகாசம்மன் யோஜனா திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள ஒரு கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.6,000 வழங்கப்படும். இந்தத் திட்டம் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இதன் கீழ் வழங்கப்படும் தொகையானது, பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் பயன் பெறும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தவணை முறையில் […]

You May Like