fbpx

பயங்கர அலர்ட்… இந்த மாவட்டத்தில் எல்லாம் கனமழை பெய்யும்…! வானிலை மையம் கணிப்பு

தமிழகத்தில் வரும் 16-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் வரும் 16-ம் தேதி வரை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை..! 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..! தயார் நிலையில் மீட்புப் படை..!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மன்னார் வளைகுடா, தமிழ்நாடு கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

அதிரடி மாற்றம்... கோயில்களில் கிரெடிட், டெபிட் கார்டு பயன்படுத்தி அர்ச்சனை...! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு...!

Tue Sep 13 , 2022
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 500 கோயில்களில் கிரெடிட், டெபிட் கார்டு பயன்படுத்தி அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் இதர சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அமலுக்கு வருகிறது என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. அதன் படி, முதற்கட்டமாக பழநி முருகன் கோயிலில் சோதனை அடிப்படையில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்பொழுது மாநிலம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 500 கோயில்களில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு […]

You May Like