fbpx

தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய லேசான மழை…! சென்னை வானிலை மையம் கணிப்பு…!

தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி‌ குறிப்பில்; தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகத்தின் மேல் நகர்ந்து நேற்று காலை வலுவிழந்தது. வட தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று முதல் 28-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் .

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24முதல் 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மீனவர்களுக்கு எந்த ஒரு எச்சரிக்கையும் இல்லை.

Vignesh

Next Post

அரசு சுகாதார அலுவலகத்தில் வேலை..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? மிஸ் பண்ணிடாதீங்க..!!

Fri Nov 25 , 2022
திருவண்ணாமலை இணை இயக்குனர் நலப்பணிகள் அலுவலகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். பணியின் முழு விவரங்கள்: பணியின் பெயர் சம்பளம் கணக்கு உதவியாளர் ரூ.16,000 பிசியோதெரபி சிகிச்சை அளிப்பவர் ரூ.13,000 நகர்ப்புற சுகாதார மேலாளர்/ சுகாதார செவிலியர் ரூ.25,000 கல்வித்தகுதி: கணக்கு உதவியாளர் Tally படிப்புடன் B.com முடித்திருக்க வேண்டும் பிசியோதெரபி சிகிச்சை அளிப்பவர் பிசியோதெரபி படிப்பில் இளம்நிலை […]

You May Like