fbpx

உஷார்..! 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்… மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை…!

தமிழகத்தில் வரும் 22-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே போல திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை முதல் வரும் 22-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இன்று முதல் 20-ம் தேதி வரை கற்றல் விளைவு திறனறி தேர்வு நடத்த வேண்டும்...! பள்ளிக் கல்வி துறை அதிரடி உத்தரவு...!

Tue Oct 17 , 2023
இன்று முதல் 20-ம் தேதி வரை கற்றல் விளைவு, திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வுகளை நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்; அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுத்தும் நோக்கத்தில் மாநில மதிப்பீட்டுப் புலம் பெயரில் திறனறி தேர்வுகள் பள்ளிக்கல்வித் துறை சார்பில் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நடப்பாண்டு அனைத்து அரசுப் பள்ளிகளிலும் […]

You May Like