fbpx

24-ம் தேதி வரை மழை…! 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று எச்சரிக்கை…! வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். அதன்பிறகு இது மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதியை நோக்கி நகரக் கூடும்.இதன் காரணமாக இன்று முதல் 25-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும்.

குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 30 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளை மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஷாக்கிங் நியூஸ்..!! இந்தியாவுக்குள் நுழைந்தது சீனாவின் புதிய வைரஸ்..!! சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!

Thu Dec 22 , 2022
இந்தியாவிலும் 3 பேருக்கு சீனாவின் புதிய வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சர்வதேச அளவில் சீனாவில் முதன் முறையாக 2019 டிசம்பர் முதல் கொரோனா மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பல நாடுகள் மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தி மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வந்துள்ளன. இந்நிலையில் தற்போது சீனா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடுகிறது. இதன் காரணமாக இந்தியாவிலும் கொரோனா கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த […]

You May Like