அங்கன்வாடிகளில் கழிவறை கட்ட ரூ.75,000 நிதி ஒதுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெறும் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நேற்று முன்தினம் செங்கோட்டையன் பங்கேற்றார். இந்த குழுவின் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. மத்திய அரசின் திட்டங்களை மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்துவதும், அதன் தொடர்ச்சியாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டு இருக்கக்கூடிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தமிழக முதலமைச்சரை கொண்டு இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளது.
அங்கன்வாடிகளில் கழிவறை கட்ட தமிழக அரசு தற்போது ரூ.30,000 நிதி அளிக்கிறது. இந்த நிதி 2025-26ஆம் ஆண்டு முதல் ரூ.75,000ஆக அதிகரிக்கப்பட இருப்பதாக மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இதேபோல் அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் விடுத்த கோரிக்கையை ஏற்று, தேங்காய் விவசாயிகளுக்கு முன்கூட்டியே நிதி விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.