fbpx

கிருஷ்ணகிரி மாணவி பலாத்கார விவகாரம்..!! கெடு வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்.. அதிரடி ஆணை..!!

கிருஷ்ணகிரி வன்கொடுமை விவகாரம் 15 நாட்களுக்குள் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க தமிழ்நாடு டிஜிபி தலைமையில் சிறப்பு குழுவை அமைத்திட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளியில், கடந்த 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை என்சிசி முகாம் நடைபெற்றது. அதில், 17 மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமில் பங்கேற்ற 8ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவியை பயிற்சியாளரும், நாம் தமிழர் கட்சி நிர்வாகியுமான சிவராமன் (35) பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

மேலும் 13 மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பயிற்சியாளர் சிவராமன் உள்பட 11 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். சிவராமன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மாணவி வன்கொடுமை விவகாரத்தை தாமாக முன்வந்து மகளிர் ஆணையம் விசாரணைக்கு எடுத்துள்ளது.

கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் நடந்த என்.சி.சி. முகாமில், 8ஆம் வகுப்பு மாணவி பயிற்சியாளரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவமும், அதற்கு பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள், சக பயிற்சியாளர்கள் உடந்தையாக இருந்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை 15 நாளில் விசாரித்து முடிக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இந்த சம்பவங்களைப் பற்றி முழுமையான விசாரணையை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் நடவடிக்கைகளை எடுக்கும் வகையில், காவல்துறை தலைவர் (டிஜிபி) பவானீஸ்வரி ஐபிஎஸ் தலைமையில், சிறப்பு புலனாய்வு குழு (SIT) ஒன்றை அமைத்திட முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

மேலும், வழக்குகளின் விசாரணையை விரைந்து முடித்து 60 நாட்களுக்குள் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனையை பெற்றுத்தர வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளார். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் தடுப்பது குறித்து உரிய பரிந்துரைகளை அளித்திட சமூகநலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் பல்நோக்கு குழு அமைத்திடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Read more ; நொடியில் மறைந்த படகு.. புயலால் மூழ்கிய சிசிலி படகின் சிசிடிவி காட்சி..!!

English Summary

Chief Minister Stalin has ordered the formation of a special committee headed by the Tamil Nadu DGP to take all measures within 15 days in the case of Krishnagiri atrocities.

Next Post

உஷார்..!! செல்போன் பார்த்தபடி படுத்துக் கொண்டே ரசகுல்லா சாப்பிட்ட சிறுவன்..!! மூச்சுத்திணறி உயிரிழந்த சோகம்..!!

Wed Aug 21 , 2024
Doctors warn not to eat the cell phone and eat.

You May Like