மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானத்தை இன்று சட்டமன்றத்தில் முன்மொழிகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானத்தை முன்மொழிகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.மாநில உரிமை மற்றும் அதிகாரத்தை மத்திய அரசு பறித்து படித்து வருவதாக தொடர்ந்து திமுக அரசாங்கம் கூறிவரும் நிலையில், மாநில சுயாட்சி தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போடுவது, துணைவேந்தர்கள் நியமனத்தில் குறுக்கீடு உள்ளிட்டவைகளை முன்வைத்து இந்த வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தீர்ப்பு வழங்கியது.
மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்த, திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்ததாக கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்ற சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தீர்ப்பு வழங்கியது. ஆளுநர் அனுப்பிய மசோதாக்கள் மீதான குடியரசுத் தலைவரின் நடவடிக்கையும் செல்லாது என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நாடு முழுவதும் பேசுபொருளாக மாறி உள்ளது. பல்வேறு மாநில அரசாங்கங்கள் இந்த தீர்ப்புக்கு பெரும் வரவேற்பை கொடுத்துள்ளனர். தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை விரைவில் தாக்கல் செய்ய உள்ளன.
இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானத்தை முன்மொழிகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.மாநில உரிமை மற்றும் அதிகாரத்தை மத்திய அரசு பறித்து படித்து வருவதாக தொடர்ந்து திமுக அரசாங்கம் கூறிவரும் நிலையில், மாநில சுயாட்சி தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.