fbpx

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன உடனே முதலமைச்சர் ஸ்டாலின் செய்த செயல்….

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை செயலகம் சென்று குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களித்தார்..

கடந்த 12ஆம் தேதி கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், 14ஆம் தேதி ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. ஸ்டாலினின் உடல்நிலை தற்போது சீராக இருந்தாலும், அவரின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பு தெரிவித்தது..

மேலும் முதலமைச்சரின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வந்தது.. அதன்படி, முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்.. அவர் கொரோனா பாதிப்பில் இருந்து விரைந்து குணமடைந்து வருகிறார் என்றும் கூறப்பட்டது… ஸ்டாலின் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டது..

இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.. மருத்துவமனையில் நேராக தலைமை செயலகம் சென்ற அவர், குடியரசு தலைவர் தேர்தலில் தனது வாக்கினை செலுத்தினார்.. தலைமை செயலகத்தில் உள்ள வாக்குப்பெட்டியில் தனது வாக்கினை செலுத்தினார்.. இதை தொடர்ந்து முதலமைச்சர் தனது வீட்டிற்கு திரும்பினார்..

Maha

Next Post

“ தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்..” அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி..

Mon Jul 18 , 2022
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பிளஸ்2 மாணவி ஸ்ரீமதி, தனியார் பள்ளி விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.. மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், மாணவி இறப்பதற்கு முன் அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும், மாணவியின் உடைகளிலும் ரத்த கறைகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் ’ஸ்மார்ட் கிளாஸ்’...! சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு..!

You May Like