fbpx

“முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டம் ரூபாய் 1 கோடி வரை கடன்…! முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மட்டும்…!

தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று முன்னாள் படைவீரர் நலனுக்காக “முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் எனவும், இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 விழுக்காடு மூலதன மானியமும், 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும் என தெரிவித்தார். இதனை பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் சென்று விண்ணப்பிக்கலாம் .

இத்திட்டத்தின் மூலம் முன்னாள் படைவீரர்களுக்கு அதிகபட்சமாக ஒரு கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இதன் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 விழுக்காடு மூலதன மானியமும் 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முன்னாள் படைவீரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 55 ஆகும். மணமாகாத மகள்கள் மற்றும் கணவனை இழந்த கணவனை பிரிந்த மகள்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் கைம்பெண்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 21 அதிகபட்ச வயது வரம்பு 55 ஆகும்.

விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வி தகுதி ஏதும் இல்லை. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வருமான வரம்பு ஏதும் இல்லை. எனவே, இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் முன்னாள் படைவீரர்அவர்களைச் சார்ந்தவர்கள் மேலும் விபரங்களுக்கு இணைய முகவரியின் மூலம் htps://ex-servicemen-welfare.pixous.info -விலும் விண்ணப்பிக்கலாம்.

English Summary

Chief Minister’s “Protecting Hands” scheme: Loans up to Rs. 1 crore…! Only for ex-servicemen

Vignesh

Next Post

ஒரே இளைஞருடன் தாயும், மகளும் உல்லாசம்!. கணவரை கொலை செய்து வீட்டிற்குள்ளேயே புதைத்த கொடூரம்!. விசாரணையில் அம்பலமான நாடகம்!.

Sat Feb 1 , 2025
Mother and daughter having fun with the same young man!. The cruelty of killing her husband and burying him inside the house!. Drama exposed in the investigation!.

You May Like