தமிழகத்தில் டெங்கு பாதிப்பானது குறைந்துள்ள நிலையில் தமிழகத்தில் சிக்குன்குனியா காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் மற்றும் மழையால் ஏற்படும் தொற்றுநோய்கள் ஆகியவை பரவுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சாலை மற்றும் தெருக்களில் நீண்ட நாட்களாக மழைநீர் தேங்கி கொசுப்புழு உற்பத்தியாக வாய்ப்புள்ள காரணத்தால் அவற்றை அகற்றும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்பொழுது டெங்கு பாதிப்பானது குறைந்துள்ள நிலையில் தமிழகத்தில் சிக்குன்குனியா காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது.
சிக்குன்குனியா காய்ச்சல் அறிகுறிகள்
சிக்குன்குனியா பாதிப்பு ஏற்பட்டிருந்தால் காய்ச்சல், மூட்டு வலிகள், கை, கால்கள் வீக்கம், அரிப்பு, சோர்வு, வாய்க் குமட்டல் போன்ற அறிகுறிகள் இருக்கும். சிலருக்கு கண்களில் பாதிப்பு, இதயப் பிரச்னை என தீவிரமான நோய் அறிகுறிகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. எனவே இதுபோன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா, ஜப்பானிய மூளைக் காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கவும், மாவட்டநிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.