திரைப்பட டிக்கெட் விலை உயர்வு மற்றும் பிற பிரச்சினைகள் தொடர்பான மனுக்களை விசாரித்த தெலுங்கானா உயர்நீதிமன்றம் இரவு 11 மணிக்கு மேல் திரையரங்குகளில் திரைப்படம் பார்க்க 16 வயதுக்கு உட்பட்டவர்களை அனுமதிக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திரைப்பட டிக்கெட் விலை உயர்வு மற்றும் பிற பிரச்சினைகள் தொடர்பான தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவில், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தாமதமான நேரங்களில் திரையரங்குகளுக்குச் செல்ல அனுமதிக்கக்கூடாது, திரையரங்குகளில் கட்டண நிர்ணயம் அரசு கொண்டுவர வேண்டும் எனக் கூறி என வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கும் வந்தது. அப்போது நீதிபதிகள், இது தொடர்பாக அரசு தனது இறுதி முடிவை அறிவிக்கும் முன், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் யாரும் இரவு 11 மணி முதல் காலை 11 மணி வரை திரையரங்குகளுக்குள் நுழைய அனுமதிக்க கூடாது என்பதை உறுதி செய்யுமாறு தெலுங்கானா உயர்நீதிமன்றம் திங்கட்கிழமை மாநில அரசுக்கு உத்தரவிட்டது. மல்டிபிளெக்ஸ் மற்றும் திரையரங்குகளில் இரவு 11 மணிக்குப் பிறகு 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் திரைப்படங்களைப் பார்க்க அனுமதிக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
இந்த விவகாரம் குறித்து அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் கலந்துரையாடி, 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இரவு 11 மணி முதல் காலை 11 மணி வரை திரையரங்குகளில் நுழைவதற்கான கட்டுப்பாடுகளை அமல்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் உத்தரவிடுமாறு தெலுங்கானா உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.