fbpx

‘சிப்பி தோற்றம் கொண்ட அரிய உயிரினம்’ வீட்டுக்கு எடுத்துச் சென்ற சிறுவர்கள்..! ரூ.73 லட்சம் அபராதம் விதித்த அதிகாரிகள்!

குழந்தைகள் அறியாமல் செய்த தவறுக்காக அவர்களது பெற்றோருக்கு 73 லட்ச ரூபாய் அளவுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். இந்த சம்பவம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலில் வாழும் உயிரினங்களில் அதிக அழகும், அதிக சுவையுடனும் கடல் மட்டி இருக்கும். பார்ப்பதற்கு சிப்பி போன்று காட்சியளிக்கும் இவற்றின் ஓடுகளுக்கு உள்ளே சுவை மிகுந்த சதைப்பற்று இருப்பதால், பல நாடுகளிலும் இது மிகவும் விருப்பமான உணவாக இருக்கிறது. இந்த மட்டிகள் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாண கடற்கரைகளில் அதிகளவில் காணப்படுகின்றன.

அமெரிக்காவில் சார்லோட் ரஸ் என்ற பெண் தனது குழந்தைகளை பிஸ்மோ கடற்கரைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு குழந்தைகள் உற்சாகத்துடன் கடல் அலையில் கால்களை நனைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் கடற்கரையில் கீழே கிடந்த மட்டி உயிரினத்தை கடல் சிப்பி என்று நினைத்து அந்த குழந்தைகள் சேகரித்துள்ளனர். மொத்தம் 72 மட்டிகள் 5 குழந்தைகளால் சேகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உரிய அனுமதி இன்றி மட்டிகளை சேகரித்ததற்காக, கடற்கரையில் இருந்த மீன்வளத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குழந்தைகளை பிடித்துள்ளனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் குழந்தைகளின் தாயார் சார்லோட் ரஸிற்கு அதிகாரிகள் 88 ஆயிரம் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.73 லட்சத்தை அபராதமாக விதித்துள்ளனர்.

இதனால் சார்லோட் ரஸ் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகினார். குழந்தைகள் அறியாமல் செய்த தவறுக்காக இந்த அளவுக்கு அபராதம் விதிப்பதா? என்று அவர் தனது ஆதங்கத்தை ஊடகங்களில் வெளிப்படுத்தியுள்ளார். இந்த நிகழ்வு தனக்கு மனரீதியில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க கடற்கரை பகுதிகளில் மீனவர்களைத் தவிர வேறு யாரும் மட்டிகளை சேகரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் என்றாலும், ஒரு நாளைக்கு 10 மட்டிகளுக்கு மேல் சேகரிக்கக் கூடாது. ஆனால், எவ்வித அனுமதியும் இல்லாமல், குழந்தைகள் 72 மட்டிகளை சேகரித்தனர். இதனால், குழந்தைகளின் தாயார் சார்லட் ரஸ்-க்கு மீன்வளத்துறையினர் அபராதம் விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வயதுடையவர்கள் இதை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்..? மறந்துறாதீங்க..!! இவ்வளவு பயன்களா..?

Next Post

இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!! உங்கள் கணக்கு மூடப்படுகிறது..!!

Mon May 27 , 2024
Public sector Punjab National Bank has warned that customers' accounts will be closed if there are no transactions and no balance in their accounts for 3 years.

You May Like