இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என்று பன்முகத்தன்மையை கொண்டவர் நடிகர் மனோபாலா. இவர் தமிழில் சற்று ஏறக்குறைய 700 திரைப்படங்களுக்கு மேலாக குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். இவர் பெரும்பாலும் காமெடி வேடங்களில் தான் நடித்து வந்தார். இவர் தன்னுடைய யூடியூப் சேனலில் பிரபலங்களையும் பேட்டி எடுத்து வந்தார்.
இத்தகைய நிலையில், சமீபத்தில் அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது. ஆகவே அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தற்போது ஆஞ்சியோ சிகிச்சை வழங்கப்பட்டது. அதன் பிறகு குணமடைந்து அவர் வீடு திரும்பினார். இத்தகைய நிலையில், தான் என்று அவர் உடல் நலக்குறைவு காரணமாக, திடீரென்று உயிரிழந்தார்.