fbpx

கவனம்…! இன்று தொடங்கு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு… இந்த தவறை செய்தால் 3 ஆண்டு தேர்வெழுத தடை…!

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்க உள்ள நிலையில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி மார்ச் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல்நாளில் தமிழ் உட்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,316 தேர்வு மையங்களில் 8 லட்சத்து 21,057 பேர் எழுதுகின்றனர். இதில் 7,518 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 02,568 மாணவர்கள், 18,344 தனித்தேர்வர்கள் மற்றும் 145 கைதிகளும் அடங்குவர்.

மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வறைக்குள் செல்போன் உட்பட மின்சாதனம் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹால்டிக்கெட்டில் உள்ள விதிகளை பின்பற்றி மாணவர்கள் நடக்க வேண்டும். விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனா கொண்டு மட்டுமே எழுத வேண்டும்.

மேலும், எக்காரணம் கொண்டும் கலர் பென்சில், வேறு கலர் பேனா கொண்டு எழுதக்கூடாது. அதேபோல், விடைத்தாள்களில் எவ்வித சிறப்பு குறியீடு, தேர்வெண், பெயர் ஆகியவற்றை குறிப்பிடக்கூடாது. மாணவர் புகைப்படம், பதிவெண், பாடம் முதலான விவரங்கள் கொண்ட முகப்புத்தாள், முதன்மை விடைத்தாளுடன் இணைத்து வழங்கப்படும். அதை சரிபார்த்து மாணவர்கள் கையொப்பமிட வேண்டும்.

பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வது, துண்டுத்தாள் அல்லது பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் ஆகிய ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அந்த மாணவர் மீது விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வெழுத தடை விதிக்கப்படும். மேலும், ஒழுங்கீன செயல்களை ஊக்கப்படுத்த பள்ளி நிர்வாகம் முயன்றால் அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Class 12th public exams start today… If you make this mistake, you will be banned from taking the exam for 3 years

Vignesh

Next Post

Health Tips: நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைப்பதால் இத்தனை ஆபத்துக்கள் வருமா..? - மருத்துவர் எச்சரிக்கை

Mon Mar 3 , 2025
Health Tips: Are there so many dangers of holding urine for a long time? - Doctor alert

You May Like