fbpx

BREAKIG NEWS | “சின்னவருக்கு” போஸ்டிங் என்னாச்சு.? முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த அசத்தலான விளக்கம்.!

தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க இருக்கிறார் என்ற செய்தி கடந்த சில தினங்களாக தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜனவரி 22 ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பொறுப்பேற்பார் என்றும் செய்திகள் வெளியாயின.

இந்நிலையில் இந்த செய்திகள் குறித்து விளக்கம் அளித்திருக்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின். இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக பதவி ஏற்க இருக்கிறார் என்ற செய்திகள் முற்றிலும் வதந்தியே என தெரிவித்துள்ளார். எதையாவது கூறிக்கொண்டு பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் எதிரிகள் இவ்வாறு செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார் .

துணை முதல்வர் பதவி குறித்து பரபரப்பை ஏற்படுத்தியவர்கள் தற்போது எனது உடல் நலம் குறித்த வதந்திகளை பரப்பி வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். திமுக இளைஞரணி மாநாட்டில் எழுப்பப்பட இருக்கும் மாநில உரிமை முழக்கத்தை மடை மாற்றுவதற்காக எதிரிகள் இதுபோன்ற வதந்திகளை பரப்பி வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். இதற்கு கழக உடன்பிறப்புகள் ஒருபோதும் இடமளிக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளார். முன்னதாக துணை முதல்வர் பதவி குறித்த கேள்விக்கு அனைத்து அமைச்சர்களுமே முதல்வருக்கு துணையாக தான் இருக்கிறோம் என்று உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

Next Post

ராமர் கோவில் திறப்பு: ஸ்ரீ ராமரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் 'மோடி'.! முன்னாள் அமைச்சர் அத்வானி புகழாரம்.!

Sat Jan 13 , 2024
ராமர் கோயில் திறப்பு விழா மற்றும் ராம் லாலா சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு அயோத்தியில் வருகின்ற  ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வை பிரதமர் மோடி தலைமை ஏற்று நடத்த இருக்கிறார் இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் சாமியார்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.   இந்நிலையில் ராமர் கோயில் பற்றியும் அதற்கான நிகழ்வுகள் குறித்தும் தனது கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார் […]

You May Like