fbpx

#சற்று முன்: |பிரதமர் மோடி தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு! காங்கிரஸ் தலைவர் கைது!

இந்திய பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளிலும் நலத்திட்டங்களிலும் பங்கேற்பதற்காக இன்று தமிழகம் அந்த நிலையில் அவருக்கு கருப்பு கொடி காட்டி கருப்பு பலூன் பறக்கவிட்டு சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதிலும் 500க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் . சென்னை கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் திட்டம் மற்றும் சென்னை விமான நிலையத்தின் புதிய முகம் திறப்பு ஆகியவற்றிற்காக இன்று சென்னைக்கு வருகை புரிந்தார் பிரதமர் மோடி. ஆளுநர் கே. எம். ரவி தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பிரதமரை வரவேற்றனர்.

இந்நிலையில் ராகுல் காந்தியின் தகுதி நீங்க நடவடிக்கையை கண்டித்து பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் தமிழகம் முழுவதும் கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சென்னைக்கு வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டிய வழக்கில் காங்கிரஸ் மாநில தலைவர் கே எஸ் அழகிரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரும் கைது செய்யப்பட்டார். தமிழக முழுவதும் 500க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்களும் இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Baskar

Next Post

உபியில் துணிகரம்: பாஜக பொதுச்செயலாளர் மகன் மீது வெடிகுண்டு வீச்சு! இன்ஸ்பெக்டர் மகன் செய்த சதியா?

Sat Apr 8 , 2023
உத்திரபிரதேசம் மாநிலத்தில் பிரக்ய ராஜில் பாஜக பொதுச்செயலாளரின் மகன் வந்த வாகனத்தின் மீது குண்டு வீச்சு தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது . உத்திரபிரதேச மாநிலத்தில் தற்போது வெடிகுண்டு வீச்சு தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூடு போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தற்போது நடைபெற்றுள்ள சம்பவம் பாஜக பொதுச் செயலாளர் மகன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி […]

You May Like