fbpx

அசத்தல்…! மிக குறைந்த விலையில் 2024 ஆம் ஆண்டுக்குள் 5 எம்-சாண்ட்…! அரசு அதிரடி அறிவிப்பு…!

சுரங்கம் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1957-ன் கீழ், மணல் சிறு கனிமமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. சிறு கனிமங்களின் நிர்வாக கட்டுப்பாடு மாநில அரசுகளின் கையில் உள்ளது. அதன்படி குறிப்பிட்ட விதிமுறைகளின் கீழ் மாநிலங்கள் அதனை ஒழுங்குமுறைப்படுத்தியுள்ளன.

மிக அதிகத் தேவை, கட்டுப்படுத்தப்பட்ட விநியோகம், ஆற்று நீர் சூழலைப் பாதுகாக்க மழை காலத்தில் மணல் வாருவதற்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளது ஆகிய காரணங்களால் ஆற்று மணலுக்கு மாற்று கண்டுபிடிப்பது அவசியமாகி உள்ளது. கனிம வள அமைச்சகம் தயாரித்துள்ள மணல் குவாரி கட்டமைப்பு, எம்-சாண்ட் எனப்படும் உற்பத்தி செய்யப்படும் மணலுக்கு மாற்று ஆதாரங்களை வகுத்துள்ளது. அதன்படி பாறைகளைப் பொடியாக அரைத்து இந்த மணல் தயாரிக்கப்படுகிறது.

எம்-சாண்ட் தயாரிப்பதில் ஏற்படும் கழிவுகளை திறந்தவெளியில் கொட்டுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கத்தை குறைக்க, கோல் இந்தியா லிமிடெட் எனப்படும் இந்திய நிலக்கரி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தரமான எம்-சாண்ட் உற்பத்தியை ஊக்குவிக்க 2024 ஆம் ஆண்டுக்குள் 5 எம்-சாண்ட் தயாரிப்பு தொழிற்சாலைகளை உருவாக்க இந்திய நிலக்கரி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Vignesh

Next Post

டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு..!! இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! சம்பளம் ரூ.2 லட்சமாம்..!!

Sat Jan 28 , 2023
சுற்றுலா அலுவலர் பதவிக்கான நேரடி நியமன வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. பணியின் விவரங்கள்: பதவியின் பெயர்: சுற்றுலா அலுவலார் காலியிடங்கள்: 3 சம்பளம்: ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வயது வரம்பு: * இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 18 வயது நிறைவு செய்திருக்க வேண்டும். * SC, SC (A), ST, MBC/DC, BC (OBCM), BCM பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை. கல்வித்தகுதி: Travel and […]

You May Like