fbpx

கஞ்சா விற்கும் குற்றவாளியுடன் கூட்டு..!! தலைமைக் காவலர் சிக்கியது எப்படி..? மதுரையில் அதிர்ச்சி சம்பவம்..!!

மதுரை மாவட்டம் குமாரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (69). இவர், கஞ்சா விற்பனை செய்துவருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சுப்புராஜை பின் தொடர்ந்த போலீசார், அவர் கையில் கஞ்சா வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடித்தனர். இதனையடுத்து, அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து, சுப்புராஜிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், நீதிமன்ற வழக்கு கண்காணிப்பு தலைமை காவலராக பணிபுரியும் ஆத்திகுளம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (50) என்பவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை சுப்புராஜ் பெற்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், தலைமைக் காவலர் பாலமுருகனை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

போதைப்பொருள் தடுப்பு பிரிவு தலைமை காவலர் இதுபோன்று பல்வேறு கஞ்சா வழக்கு குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்தாரா? பாலமுருகனுடன் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தவும் தனிப்படை காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். கஞ்சா விற்பனையை தடுக்க மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், தலைமைக் காவலரே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More : விவசாயிகளுக்கு செம குட் நியூஸ்..!! ரூ.78.67 கோடி ஒதுக்கீடு..!! தமிழக வேளாண்துறை அறிவிப்பு..!!

English Summary

The Special Police seized 2 kg of ganja and interrogated Subpuraj.

Chella

Next Post

அவசர தேவைக்காக கிரெடிட் கார்டில் பணம் எடுக்குறீங்களா..? சிக்கலில் மாட்டிக்காதீங்க..!!

Fri Jun 14 , 2024
Savings account and fixed deposits are sufficient for accumulating small emergency funds.

You May Like