சென்னை மாநகர பகுதியில் உள்ள அயனாவரம் என்எம்கே தெருவை சேர்ந்தவர் பிரேமா. இவர் ஒரு துப்புரவு பணியாளர். இவரது கணவர் அகஸ்டின் ஆனந்தன், சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.
இவர்களது மகள் ஹெலன் (25), தனியார் கல்லூரியில் பி.டெக் படித்து வந்தார். நேற்று ஹெலனின் பிறந்தநாள் என்பதால் தேவாலயத்தில் சென்றுவிட்டு வீடு திரும்பி உள்ளார்.
இந்த நிலையில் வேலைக்குச் சென்ற பிரேமா, மதியம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, மகள் மின்விசிறியில் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
ஹெலனின் மரணம் குறித்து தகவல் அறிந்த அயனாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், ஹெலன் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து அயனாவரம் போலீசார், மாணவியின் செல்போனை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.