fbpx

பெரும்பாலான மக்கள் கவனிக்க தவறும் புற்றுநோயின் அறிகுறிகள்.! மருத்துவர்கள் தரும் எச்சரிக்கை.!

இதய நோய்க்கு அடுத்தபடியாக உலகில் அதிகமானவர்களின் இறப்பிற்கு காரணமான நோயாக புற்று நோய் இருக்கிறது. 2020 ஆம் ஆண்டில் மட்டும் புற்று நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10 மில்லியன் ஆகும். இத்தகைய உயிர் கொல்லி நோயான புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் எளிதாக குணப்படுத்தி விடலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் புற்றுநோயின் சில அறிகுறிகளை மக்கள் கவனிக்காமல் விடுவதால் தான் நோய் தொற்றுக்கு ஆளாகி உயிரிழக்கவும் நேரிடுகிறது. புற்றுநோயின் அறிகுறிகளும் சில சாதாரண நோய்களின் அறிகுறிகளை போலத்தான் இருக்கும் எனவே அவற்றை கவனமுடன் கண்காணித்து மருத்துவர்கள் அணுகி சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

பெரும்பாலான புற்று நோய்களின் அறிகுறிகளை 90 சதவீத மக்கள் சட்டை செய்யாமல் இருப்பதே நோய் தீவிரமடைந்து உயிரிழப்பிற்கு காரணமாகிறது எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சில புற்று நோயின் அறிகுறிகளை இந்த பதிவில் காணலாம். எலும்பு வலி புற்றுநோயின் அறிகுறிகளில் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஒருவருக்கு கடுமையானது முதல் மிதமானவரை எலும்பு வலி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுமாறு வல்லுனர்கள் அறிவுறுத்துகின்றனர். காரணம் இல்லாமல் மூட்டுகளில் ஏற்படும் எலும்பு வலி எலும்பு புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம் எனவும் எச்சரிக்கின்றனர். தண்ணீரை குடிப்பதிலும் உணவை விழுங்குவதிலும் சிரமம் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுமாறு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில் தண்ணீர் குடிப்பதில் சிரமம் இருப்பதும் உணவை விழுங்குவதில் சிரமம் ஏற்படுவதும் புற்றுநோயின் அறிகுறிகளில் ஒன்றாக இருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒருவருக்கு சரும அரிப்பானது பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். உதாரணமாக அலர்ஜி மற்றும் தோல் நோய்களாலும் சரி ஏற்படலாம். எனினும் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதிக்கப்பட்ட ரத்த செல்கள் பேலெட்டுகளில் இடையூறை ஏற்படுத்துவதாலும் உடலில் அரிப்பு ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே அலர்ஜி இல்லாமல் தோல் அரிப்பு இருந்தால் மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. நெஞ்சு எரிச்சல் மற்றும் நிலையான நெஞ்சுவலி புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இவை வயிற்றுப் புற்றுநோய் அல்லது உணவு குழாய் புற்றுநோயின் அறிகுறிகளில் ஒன்றாக இருக்க வாய்ப்பிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மூச்சுத் திணறல் நுரையீரல் புற்று நோயின் அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே ஒருவருக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்படும்போது அதற்குரிய மருத்துவரை ஆரம்பத்தில் சந்தித்து சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லதாகும்.

Next Post

பனங்கிழங்கை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா.? அவற்றால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன.?

Wed Dec 27 , 2023
தமிழர்களின் பண்டிகையான தைப்பொங்கல் பண்டிகையின் கொண்டாட்டத்தில் கரும்பும் பனங்கிழங்கும் இன்றியமையாதது. இதில் பனங்கிழங்கு நம் உடலுக்கு தேவையான பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது. பொதுவாக கிழங்கு வகைகள் என்றாலே அவை நீரிழிவு நோயாளிகளுக்கு எதிரி என்று தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பனங்கிழங்கு நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியம் வழங்கக்கூடிய பல்வேறு நன்மைகளைக் கொண்டிருக்கிறது. கிழங்கு வகைகளிலேயே பனங்கிழங்கு குறைந்த அளவு கிளைசெமிக் குறியீடு கொண்டிருக்கிறது. இவை இன்சுலின் சுரப்பை சீர்படுத்துகிறது. இதன் […]

You May Like