செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த துங்கபத்ரா நகரைச் சார்ந்தவர் செந்தில்குமார்(41) இவர் அதிமுக ஒன்றிய எம்ஜிஆர் மன்ற இளைஞரணி செயலாளராக இருந்து வந்தார். கன்ஸ்ட்ரக்ஷன் தொழில் சம்பந்தமாக இவருக்கும் இன்னொருவருக்கும் முன் விரோதம் இருக்கவே காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டுவிற்கு குடி பெயர்ந்தார்.
செங்கல்பட்டுவில் தனது கன்ஸ்ட்ரக்ஷன் பணியை தொடர்ந்தார். இந்நிலையில் கடந்த மாதம் தனது இரண்டு குழந்தைகளை பள்ளியில் விட்டு பணிக்குத் திரும்பியவரை நான்கு பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சராமாறியாக வெட்டியது. படுகாயம் அடைந்தவர் செங்கல்பட்டு அரச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது தொடர்பாக குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில் செந்தில்குமாரின் உறவினரான விஜயலட்சுமி என்பவரை கைது செய்துள்ளது காவல்துறை. விஜயலட்சுமி சில நாட்களுக்கு முன்பே லட்ச ரூபாய்க்கு பல ஆயிரங்கள் வட்டி தருவதாக கூறி நிதி மோசடி ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொலை செய்யப்பட்ட செந்தில்குமார் விஜயலட்சுமி டம் அதிக வட்டிக்கு பணம் கிடைக்கும் என ஆசைப்பட்டு பல லட்சங்களை முதலீடாக செய்துள்ளார். ஆனா விஜயலட்சுமி இவருக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றியதால் சமீபத்தில் கூட அவரை சந்தித்து மிரட்டி இருக்கிறார் செந்தில்குமார் . இதனால் கூலிப்படையினரின் உதவியுடன் செந்தில்குமாரை கொலை செய்து இருக்கிறார் விஜயலட்சுமி. இந்த வழக்கில் அவருடன் மேலும் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .