fbpx

தொடரும் கனமழை.. இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை.. இந்த மாவட்டங்களில் மட்டும் தான்..

நாடு முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ளது.. மகராஷ்டிரா, அசாம், டெல்லி, ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. இதே போல் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி போன்ற தென் மாநிலங்களிலும் இடைவிடாது மழை பெய்து வருகிறது. சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதாலும், தாழ்வான பகுதிகளில் வெள்ள்நீர் புகுந்துள்ளதாலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது..

அந்த வகையில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே இடைவிடாத கனமழை பெய்து வருகிறது.. குறிப்பாக நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், உதகை, குந்தா உள்ளிட்ட பல இடங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது.. நீலகிரியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (15-07-2022) ஒரு நாள் விடுமுறை அறிவித்து, மாவட்ட ஆட்சியர் எஸ்.பி அம்ரித் உத்தரவிட்டுள்ளார்..

இதே போல் புதுச்சேரியில் பெய்து வரும் இடைவிடாத மழையால், கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 14 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.. மேலும் மக்களின் உதவிக்காக கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது..

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏனாம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நீர்மட்டம் தொடர்ந்து நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.. எனவே மாணவர்களின் பாதுகாப்பு கருதி, இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. மேலும் இன்றைய விடுமுறைக்கு பதில் ஆகஸ்ட் 13-ம் தேதி பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் எனவும் ஏனாம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது..

Maha

Next Post

“ 2047க்குள் இந்தியாவை இஸ்லாமிய தேசமாக்குவதே இலக்கு...” சதித்திட்டம் தீட்டிய 2 பயங்கரவாதிகள் கைது...

Fri Jul 15 , 2022
பீகார் தலைநகர் பாட்னாவில் தேச விரோத செயல்களில் ஈடுபட்ட இரண்டு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் ஜார்க்கண்ட் காவல்துறையின் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான முகமது ஜலாலுதீன், என்பவரும் ஒருவர்.. மற்றொருவர் அதர் பர்வேஸ். இவர்கள் இருவரும் தற்காப்பு கலை என்ற போர்வையில் தீவிரவாத பயிற்சி அளித்து வந்ததாக பாட்னா போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து ’மிஷன் 2047′ என்ற ரகசிய ஆவணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அதில் 2047க்குள் […]

You May Like