fbpx

அரசு வேலை கிடைக்க தனது 3 வது பெண் குழந்தையை கால்வாயில் வீசி கொன்ற தம்பதி..! 

36 வயதான ஜவர்லால் மக்வால், ராஜஸ்தானில் அரசுத் துறையில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஓராண்டுக்கு முன் கர்ப்பமானார். இவர்களுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு 3வது பெண் குழந்தை பிறந்தது. 

இதற்கிடையில், தனக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருந்ததால், மாநில அரசின் இரண்டு குழந்தைகள் கொள்கையின்படி, அவர்களின் மூன்றாவது குழந்தைக்கு நிரந்தர வேலை கிடைக்குமா என்ற ஐயத்தில் ஜவர்லால் கவலைப்பட்டார்.

இதனால், மக்வால் தனது மனைவியுடன் சேர்ந்து அவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு முடிவை எடுத்துள்ளார். அதன்படி சமீபத்தில் பிறந்த 5 மாத 3வது பெண் குழந்தையை கொல்ல திட்டமிட்டனர்.

இதையடுத்து, மேக்வால் தனது 5 மாத பெண் குழந்தையை கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இந்திரா காந்தி கால்வாயில் வீசி கொன்றார். இந்த குற்றத்திற்கு முழு ஆதரவாக இருந்த அவரது மனைவி அப்போது அவருடன் இருந்தார்.

விசாரணையில், ஜவர்லாலுக்கு நிரந்தர வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டதால், அவரும் அவரது மனைவியும் குழந்தையை கால்வாயில் வீசப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. நேற்று மகளை கொன்ற தம்பதியினர் கைது செய்யப்பட்டனர்.

Rupa

Next Post

தனது இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்து கொண்ட தாய்.. குடும்ப தகராறில் ஏற்பட்ட சோகம்..! 

Tue Jan 24 , 2023
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திக்குப்பம் அடுத்த செந்தாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கவுரி (26). இவருக்கும் கேத்தூர் கிராமத்தை சேர்ந்த முத்துராஜ் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜீவன் (4) என்ற மகனும், பாவனா ஸ்ரீ (2) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் முத்துராஜ் ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் முத்துராஜுக்கும், கவுரிக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. கடந்த 17ம் தேதி […]

You May Like