விழுப்புரம் அருகே பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்த மருமகளை தட்டி கேட்ட மாமியாரை கொடூரமாக கொலை செய்த மருமகள்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள பாண்டியங்குளம் என்ற கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் (33) இவர் ஆட்டோ ஓட்டுனராக இருந்தார். ஆனால், ஒரு விபத்து காரணமாக, தன்னுடைய காலை இழந்ததால், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இவருடைய மனைவி சங்கீதா(28) கூலி வேலை பார்த்து, கணவன் மற்றும் மாமியார் உள்ளிட்டோரை காப்பாற்றி வந்துள்ளார். ஆனாலும், இவருக்கு சில ஆண்களோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இது சங்கீதாவின் மாமியாருக்கு தெரிய வந்ததால், அவருடைய மாமியாரான சின்னபாப்பா, சங்கீதாவை கண்டித்து இருக்கிறார். வழக்கம்போல நேற்று முன்தினமும், இந்த விவகாரம் குறித்து, சங்கீதாவை சின்னபாப்பா கண்டித்தபோது, அது தகராறாக மாறி உள்ளது. அந்த தகராறில் ஆத்திரம் கொண்ட சங்கீதா, சின்னபாப்பாவை கீழே தள்ளிவிட்டார். ஆனாலும், ஆத்திரம் குறையாத சங்கீதா, மரக்கட்டையால் மாமியாரின் தலையில் பலமாக அடித்துள்ளார்.
இதனால், படுகாயம் அடைந்த சின்னபாப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து, தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த செஞ்சி காவல்துறையினர், உயிரிழந்த சின்னபாப்பாவின் உடலை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அத்துடன், மருமகள் சங்கீதாவை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது