fbpx

சூப்பர்..! ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்…!

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த டிசம்பர் 10-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளுர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த டிசம்பர் 10ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டது.

தற்பொழுது ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில்கொண்டு மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த டிச.10-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

English Summary

Deadline to pay electricity bills in 6 districts affected by Cyclone Fenchal

Vignesh

Next Post

போர்க்களமான கால்பந்து மைதானம்!. கூட்டநெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 56 பேர் உயிரிழப்பு!

Tue Dec 3 , 2024
The battlefield football field!. 56 people, including children, died in the crowd!

You May Like