fbpx

பேச மறுத்து முன்னாள் காதலி திட்டமிட்டு படுகொலை செய்த இளைஞர்…..! விசாரணையில் வெளியான பகீர் உண்மை…..!

டெல்லியை சேர்ந்த கல்லூரி மாணவி நர்கீஸ்(25) இவர் இர்பான் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. வேலை பார்க்க வந்துள்ளார் இந்த நிலையில் நர்கீசை காதலிப்பதாக இர்ஃபான் தெரிவித்து இருக்கிறார் ஆனாலும் நர்கீஸ் காதலை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக, ஆத்திரம் கொண்ட இர்ஃபான் அந்த மாணவி மீது கடுமையான கோபத்தில் இருந்திருக்கிறார். அதன் பிறகு தன்னுடன் பேச மறுத்த மாணவியை கொலை செய்ய திட்டம் தீட்டி இருக்கிறார். ஆகவே அவரிடம் பேச வேண்டும் என்று தெரிவித்து அந்த மாணவியை தனியாக அழைத்து இருக்கிறார். இதனை நம்பிய அந்த மாணவி அவர் சொன்ன இடத்திற்கு வந்துள்ளார். அங்கு அந்த மாணவியை சரமாரியாக இருந்து கம்பியால் தாக்கி துடிக்க, துடிக்க கொலை செய்திருக்கிறார் இர்ஃபான்.

அந்த பெண்ணின் உடலில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டது காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விசாரணையில் இந்த கொலையில் இர்பானுக்கு தொடர்பு இருப்பதை அறிந்து கொண்ட காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் இர்ஃபான் தான் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். அதன் பிறகு காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

இது குறித்து காவல்துறையினர் தெரிவித்ததாவது ஈர்ப்பான் நர்கிசை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு நர்கீசின் குடும்பத்தினரிடம் கேட்டிருக்கிறார். ஆனால் அவருக்கு நல்லிசை திருமணம் செய்து வைக்க அவருடைய குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்து விட்டனர். இதனால் நர்கீஸ் இருப்பான் உடன் பேசுவதை நிறுத்திவிட்டார் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இது இர்ஃபானுக்கு மேலும் ஆத்திரத்தை உண்டாக்கியிருக்கிறது. ஆகவே தனக்கு கிடைக்காத மாணவியை கொலை செய்ய அவர் திட்டமிட்ட நிலையில், நாள்தோறும் அந்த மாணவியின் செல்லும் பாதைகளில் நோட்டமிட்டிருக்கிறார். பட்டப்படிப்பை முடித்துவிட்டு அந்த மாணவி மாளவியா நகரில் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று வந்ததை பார்த்த இர்ஃபான் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் நர்கீசை கொலை செய்ய திட்டம் தீட்டி இருக்கிறார்.

ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்த நிலையில், நேற்றைய தினம் பூங்காவில் அந்த மாணவியுடன் வாக்குவாதம் செய்து இரும்பு கம்பியால் அவரை சரமாரியாக அடித்து கொலை செய்திருக்கிறார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Next Post

ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த வெங்கட் பிரபு..!! ’தளபதி 68’ அப்டேட் ரெடி..? அது என்ன 11 மணி..?

Sat Jul 29 , 2023
ஆக்‌ஷன் ஜானரில் கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள லியோ ஷூட்டிங் முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கிவிட்டன. முன்னதாக லியோ படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே விஜய்யின் 68-வது படம் குறித்த அப்டேட் வெளியானது. அதன்படி, ஏஜிஎஸ் தயாரிக்கும் தளபதி 68 படத்தை யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். முதன்முறையாக விஜய்யுடன் இணைந்துள்ள வெங்கட் பிரபு, அஜித்துக்கு மங்காத்தா ஹிட் கொடுத்ததைப் போல தளபதி 68-ஐ இயக்குவார் […]

You May Like