fbpx

விசிகவில் இணைந்த ஆதவ் ஆர்ஜுனுக்கு, அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் பொறுப்பு…! யார் இவர் தெரியுமா…?

விசிகவில் இணைந்த, ஆதவ் ஆர்ஜுனுக்கு, அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் விசிகவில் இணைந்த, ஆதவ் ஆர்ஜுனுக்கு, அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சமீபகாலத்தில் நடந்த விசிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம், திருச்சி சிறுகனூரில் நடந்த வெல்லும் சனநாயகம் மாநாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்தது ஆதவ் அர்ஜுனின் Voice of Common என்ற அமைப்பு தான். இதை குறிப்பிட்டு மாநாட்டிலேயே வெகுவாக பாராட்டியிருந்தார் விசிக தலைவர் திருமாவளவன். இந்த சூழலில் அவருக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

நேற்று சென்னை அசோக் நகர் அம்பேத்கர் திடலில் திருமாவளவன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன் படி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானங்களை வரவேற்று தீர்மானம். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டு தனித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் போது 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் அதைச் செய்ய வேண்டும்; எவ்விதத்திலும் தமிழ்நாடு அதில் பாதிக்கப்படக்கூடாது என்று ஒரு தீர்மானம்.

ஒரே நாடு ஒரு தேர்தல்’ என்ற பெயரில் இந்திய நாடாளுமன்ற ஜனநாயக முறையையே மாற்றி அமைத்து அதிபர் ஆட்சி முறையைக் கொண்டு வர ஒன்றிய பாஜக அரசு முயற்சிக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்னொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த இரண்டு தீர்மானங்களும் கடந்த ஜனவரி 26 ஆம் நாள் திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய ‘வெல்லும் சனநாயகம்’ மாநாட்டிலும் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Vignesh

Next Post

பி.எம் கிசான் திட்டத்தில் வழங்கப்படும் ரூ.2000... உடனடியாக வங்கி கணக்கில் செலுத்த மத்திய அரசு முடிவு...?

Fri Feb 16 , 2024
விளைப் பொருட்களுக்கு ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மின்சார சட்டத்திருத்த மசோதா ரத்து, விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லிக்குள் விவசாயிகள் நுழையாமல் இருக்க, எல்லையில் தடுப்புகள் போடப்படும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி நுழைபவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்துகிறது. கடந்த 2020-ம் ஆண்டு விவசாயிகள் வேளாண் சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் […]

You May Like