தமிழக அரசு சார்பில் தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கிராம உதவியாளர் பணிக்கு என பல்வேறு காலி பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 37 ஆக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்கள் 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணிக்கு ஏற்றார் போல ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பத்தார்களுக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி வழங்கப்படும். மிதிவண்டி கட்டாயம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். குறுவட்ட அளவிலும் தகுதியான நபர்கள் கிடைக்காத பட்சத்தில் காலிப்பணியிடம் அமைந்துள்ள வட்ட அளவில் மட்டுமே தகுதி வாய்ந்த நபர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்படும். விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் சென்று விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து 24.08.2022-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அதன்பின் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணி தொடர்பான விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.
For More Info: https://dindigul.nic.in/va-job-dindigul-west-taluk/