மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் இன்று நடைபெற உள்ளது.
இன்று மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பேச உள்ளார் . ராகுல் காந்தியும் இந்த விவாதத்தில் பங்கேற்க உள்ளார். மணிப்பூர் விவகாரம் பற்றி மோடியை பேச வைக்க நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் இன்று முதல் மக்களவையில் தொடங்குகிறது. இந்த விவாதத்திற்கு 12 மணி நேரம் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன. இதில், பாரதிய ஜனதாவுக்கு சுமார் 6 மணி நேரம் 41 நிமிடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு சுமார் ஒரு மணி நேரம் 15 நிமிடங்களும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.